Latestமலேசியா

அடிப்பின் குடும்பத்தாருக்கு ஆஜராகிறார் வழக்கறிஞர் சாஸ்லின்!

கோலாலம்பூர், ஜூன். 12 – அடிப்பின் மரண விசாரணையில் அவரது குடும்பத்தாரின் சார்பில் வழக்கறிஞர் சாஸ்லின் ஆஜராவார் என தெரிகிறது. இதற்கு முன்னர் அவர் வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு, தீயணைப்பு, மீட்புத் துறை இலாகா, அடிப்பின் குடும்பத்தார் ஆகிய 3 தரப்பாரின் சார்பில் ஆஜராகி இருந்தார்.

சாஸ்லின் மூன்று தரப்பாருக்கு ஆஜராவதில் சிக்கல் இருப்பதால் அவர் அமைச்சு மற்றும் தீயணைப்பு, மீட்புப் படைக்கு ஆஜராவதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென சட்டத்துத் துறைத் தலைவர் டோம்மி தோமஸ் கேட்டுக் கொண்டதை அடுத்து, அவர் அந்த முடிவை எடுத்தார்.

அமைச்சை பிரதிநிதிக்கும் அவர் அரசின் வழக்கறிஞருடன் விவாதம் நடத்துவதால் அது பிரச்சினையை உருவாக்கும் என டோம்மி தோமஸ் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு முன்னர், அந்த விசாரணையில் இருந்து தாம் முற்றாக விலகிக் கொள்வதாக அவர் குறிப்பிட்டிருதார். எனினும், இன்று அவர் மனம் மாறி அடிப்பின் குடும்பத்தாருக்கு ஆஜராவதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker