Latestமலேசியா

அமைச்சரின் ஓரினப் புணர்ச்சி: பிகேஆர் விவாதிக்கும்!-ஃபாமி

கோலாலம்பூர், ஜூன் 12 – ஓரினப் புணர்ச்சியில் பிகேஆர் அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதால் பிகேஆரின் இன்றைய மத்திய நிர்வாகக் கூட்டத்தில் அது பற்றி விவாதிக்கப்படும் என கட்சியியின் தகவல் தொடர்பு இயக்குநர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார்.

கட்சித் தலைவர்கள் மீது களங்கத்தை உருவாக்கும் நோக்கில் அம்மாதிரியான வீடியோக்கள் இதற்கு முன்னர் பரவி இருப்பதால், கட்சி உறுப்பினர்கள் அந்த வீடியோவை மேலும் பரப்பக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.

இன்றைய கூட்டத்தில் அந்த விவகாரம் பற்றி விரிவாக விவாதிக்கப்படும். அது பற்றிய புகாரை அதிகாரப்பூர்வமாக கட்சி பெறவில்லை.  குற்றம் முழுமையாக உறுதிப்படுத்துவதற்கு  முன்னர் ஒருவரை குற்றவாளி எனக் கூறக் கூடாது என பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரான ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

ஒரிரு நாட்களாக சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு  வரும் இக்காணொளியில் ஓரின சேர்க்கை உறவில் ஈடுபடுவது நானும் குறிப்பிட்ட ஒரு அமைச்சரும் தான் என மூலத் தொழில்துறை துணை அமைச்சர் சம்சுல் இஸ்கண்டாரின் மூத்த தனிப்பட்ட உதவியாளர் முகமட் ஹாஸிக் அப்துல் அஸிஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து கட்சி தலைமைத்துவம் தகவல் அறிந்திருக்க கூடும். ஆனால் எனக்கு தெரிந்த வரை இது குறித்து இதுவரை கட்சியில் யாரும் புகார் அளிக்கவில்லை என  ஃபாமி பட்ஸில் கருத்துரைத்தார்.

கட்சியின் தொகுதிகளுக்கான கூட்டங்கள் விரைவில் நடைபெறவுள்ளது. ஆனால் அக்கூட்டங்களில் இவ்விவகாரம் குறித்து பேசப்படுமா? என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது.

இவ்விவகாரம் தொடர்பில் உறுப்பினர்களுக்கு கருத்துக்கள் எழுந்தால் அதனை தயங்காமல் கட்சி தலைமைத்துவத்திடம் தெரியப்படுத்தலாம். ஆனால்  அந்த காணொளியை பிறரிடம் பகிர்வது தவறாகும்.

மேலும் அக்காணொளியில் இருக்கும் மற்றொரு நபர் முகமட் ஹாஸிக் அப்துல் அஸிஸ் தான் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியாது. அவரை நான் இன்னும் தொடர்பு கொண்டு பேசவில்லை என்றும் ஃபாமி குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker