Latestமலேசியா

அமைச்சரின் ஓரின உறவு காணொளி; பதிவேற்றம் செய்த அகப்பக்கம் முடக்கம் !

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.12- அமைச்சர் ஒருவர் ஓரின சேர்க்கை உறவில் ஈடுபடுவதாக காட்டும் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அகப்பக்கம் ஒன்றை மலேசிய தகவல் மற்றும் பல்லூடக ஆணையம் (எம்என்எம்சி) முடக்கியுள்ளது.

“சபாகினி2” என்ற பெயரை கொண்ட அந்த அகப்பக்கம் நேற்று மாலை தொடங்கி முடக்கப் பட்டுள்ளது. அப்பக்கத்திலிருந்து குறிப்பிட்ட காணொளியை நீக்கியதும் முடக்கத்தை மீட்டுக் கொள்வோம். இந்த காணொளியை நீக்குவதற்கு சில மணி நேரங்கள் தேவைப்படுகின்றன என ஆணையத்தின் தலைவர் அல்- இஷ்ஷால் இஶக் தெரிவித்துள்ளார்.

நாகரிகம் அடைந்த சமூகத்தில் வாழும் நாம் இது போன்ற இழிவான செயல்களை செய்யக் கூடாது. இது சமுதாயத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் இச்செயல் சட்டத்திற்கும் விரோதமானது என்றும் அவர் வாட்ஸ் ஆப் மூலமாக ஊடகத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker