Latestஇந்தியா

அமைச்சர் பதவி கிடைக்காததால்  வருத்தம் இல்லை! -நடிகை ரோஜா

நகரி, ஜூன்,12- அமைச்சர் பதவி கிடைக்காததால் வருத்தம் எதுவும் எனக்கு இல்லை என நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா தெரிவித்துள்ளார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பின்னர் ஐந்து துணை முதலமைச்சர்கள் உட்பட 25 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

நகரி தொகுதியின் எம்எல்ஏ.வான நடிகையுமான ரோஜாவுக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாதிரி அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஆந்திராவில் இன்று முதல் முறையாக சட்டமன்றம் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகை ரோஜா விமானம் மூலம் விஜயவாடா வந்தார்.

விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் பதவி கிடைக்காததால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.  சமூக பிரிவினை அடிப்படையில் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் இவ்வாறு ரோஜா கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker