Latestமலேசியா

அய்னூலுக்கு அறுவை சிகிச்சை வெற்றி

கோலாலம்பூர், ஜூன்.12 – வாய்ப் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த 9 மாத குழந்தை அய்னூல் மாரிட்டியாவிற்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

நேற்று, லண்டனில் நடைபெற்ற அறுவைச் சிகிச்சையில், அய்னூலின் வாயில் வளர்ந்திருந்த 200 கிராம் எடை கொண்ட கட்டியை அகற்றியதில், தாம் மிகவும் மன நிம்மதி அடைவதாக அக்குழந்தையின் தந்தை அகமட் சைபுடின் தெரிவித்தார்.

அறுவைச் சிகிச்சைக்குப் பின், அக்குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி இருந்தார்.  மேலும், தனது மகள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்திக்குமாறு அவர் முகநூலில் கேட்டுக் கொண்டார்.

அண்மையில், வாய்ப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் புகைப்படத்தைச்  சமூக ஊடங்களில் பரப்பி உதவி கோரிய வேளையில்,   மலேசிய டாக்டர் நூர் அமாலினா அக்குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முன்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பின் அவருக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகள் குவிகின்றன்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker