Latestமலேசியா

அஸ்மின் மீதான லொக்மான் புகார்: பாராபட்சமின்றி விசாரணை!- லத்தீப்பா உறுதி

கோலாலம்பூர், ஜூன்.12- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அமைச்சர் ஒருவர் மீது அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ லோக்மன் நோர் வழங்கிய புகார் குறித்த விசாரணைகள் தொழில் ரீதியிலும் பாராபட்சமின்றியும்  நடைபெறும் என ஆணையத்தின் புதிய தலைமை இயக்குனர் லத்தீப்பா கோயா உறுதியளித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் அவர் இன்று பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் , டத்தோ லோக்மன் வழங்கிய புகார் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அது குறித்த விசாரணையை ஆணைய துணை இயக்குனரும் அவரது குழுவினரும் மேற்கொள்வர். இந்த விசாரணையிலோ அல்லது அதன் முடிவுகளிலோ எவ்விதத்திலும் எனது தலையீடு இருக்காது என அவர் உறுதிப்பட குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக டத்தோஶ்ரீ அஸ்மின் அலி வங்கி கணக்கில் சந்தேகத்திற்குரிய வகையில் சேர்க்கப்பட்டிருக்கும் பணம் குறித்து விசாரணை நடத்துமாறு ஊழல் தடுப்பு ஆணையத்திடம் லொக்மான் புகார் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker