Latestமலேசியா

உணவுக் கடை உரிமையாளார் கொலை! – 4 பிலிப்பினோக்கள் கைது

தாவாவ், ஜூன் 12 – நேற்று பாஜார், ஜாலான் பாந்துவுக்கு அருகில் இருக்கும் கால்வாயில் இறந்து கிடந்த ஆடவரின் கொலை சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் 4 பிலிப்பினோ ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்த 6லிருந்து 17 வயதினர் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் ஜாலான் டன்லப், தாமான் செமாரா மற்றும் சாபின்டொ ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

தொடக்கக்கட்ட விசாரணையில்,  தாங்கள் திருடர்கள் என்றும் வழிப்பறிக் கொள்ளையர்கள் என்றும் கொல்லப்பட்டவர் தங்களை ஏசியதாகத் தெரிவித்தனர்.

மாலை 5 மணியளவில் 49 வயது ஆடவரின் சடலத்தைப் பற்றி தெரிந்தவுடன்,  போலீசார் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றினர்.  உடலில் இரண்டு கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டன.

அங்கு ஒரு திருகாணி, காய்கறி வெட்டும் கத்தி ஆகியவை கைப்பற்றப்பட்டன. இறந்தவரை அவரது மனைவி (வயது 39) அடையாளம் காட்டினார்.

கொலை செய்யப்பட்டவர் இரவு 12.45க்குத் தமது கடையை மூடி விட்டு,  வீடு திரும்பும் வழியில் கொலை செய்யப்பட்டுள்ளார். கைப்பேசி வைத்திராத அவர் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. நேற்று அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker