Latestமலேசியா

ஓரினச் சேர்க்கை காணொளி: இழிந்த அரசியல் மீண்டும் தலைதூக்கிறதா? -நூருள் ஆவேசம்

கோலாலம்பூர்,ஜூன்.12- அமைச்சர் ஒருவர் ஓரின சேர்க்கை உறவில் ஈடுபடுவதாக கூறப்படும் காணொளி வெளிவந்துள்ளது மலேசியாவின் சோக தினம் என்பதை குறிக்கின்றது என பெர்மத்தாங் பாவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நூருள்மிசா வர்ணித்துள்ளார்.

இந்த காணொளியின் மூலம் கண்மூடித்தனமான இழிந்த அரசியல் மீண்டும் தலை தூக்கி உள்ளது என்பது புலப்படுகின்றது.  இந்த காணொளி மீது மட்டும் அதித ஆர்வம் காட்டுவதை ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை விட முக்கியமான விவகாரங்கள் ஏராளம் உண்டு என்றார் அவர்.

மேலும்  அக்காணொளியின் மூலம் சிலர், தனிநபர் ஒருவர் மீது வேண்டுமென்றே அவதூறுகள் பரப்புகின்றனர். இந்த அரசியல் கலாச்சாரம் நம் நாட்டிற்கு ஏற்புடையதல்ல. பரப்பப்படும் அவதூறுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த அவதூறு தனிப்பட்ட ஒருவர், அவரை சுற்றி உள்ளவர்களை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதனை நாம் உணர வேண்டும். எனவே, இது போன்ற விவகாரங்களை விட்டொழித்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை செலுத்துவோம் என்றும் நூருள் இசா கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker