Latestமலேசியா

ஓரினப் புணர்ச்சி: ‘அந்த அமைச்சர்’ -மகாதீரைச் சந்தித்தார்!

புத்ரா ஜெயா, ஜூன் 12 – நபர் ஒருவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் அமைச்சர்,  இன்று காலை பிரதமர் துன் மகாதீரை அவரது அலுவலகத்தில் சென்று கண்டார்.

அமைச்சரவையின் வாராந்திரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர், காலை 8.45 மணியளவில் அவர் பிரதமருடன் 20 நிமிட நேரம் பேசியதாகத் தெரிகிறது. என்ன பேசப்பட்டது என்பது தெரியவில்லை.

இதனிடையே நேற்று ஆடவர் ஒருவர் வைரலாகப் பரவியிருக்கும் ஓரினப் புணர்ச்சி வீடியோவில் தாமும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

மூலத் தொழில்துறை துணை அமைச்சர் சம்சூல் இஸ்கண்டாரின் உதவியாளரான முகமட் ஹாஷிக் அப்துல் அஸிஸ், அந்த அமைச்சர் பதவிக்குப் பொருத்தமானவர் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் அமைச்சரின் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்ய வேண்டுமென முகமட் ஹாஷிக் கேட்டுக் கொண்டார்.

அமைச்சரின் ஓரினப் புணர்ச்சி வீடியோ பதிவில், அமைச்சரைப் போன்ற உருவத்தில் இருந்தவர் பல்வேறு பாலியில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் படங்கள் வாட்ஸ் அசப்பில் பரப்பப்பட்டுள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker