Latestமலேசியா

காணொளி தொடர்பில் அஸ்மினுடன் நான் உரையாடினேன்! – அன்வார்

டாமான்சாரா, ஜூன்.12-  ஒரிரு நாட்களாக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஒரின சேர்க்கை  காணொளி குறித்து தாம் பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியுடன் உரையாடியதாக பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இன்றைய கட்சியின் அரசியல் பிரிவு கூட்டத்திற்கு அஸ்மின் அலி வரவில்லை. ஆனால் நான் நேற்று அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இவ்விவகாரம் தொடர்பில் உரையாடினேன். எங்கள் உரையாடல் நீண்ட நேரம் நீடித்தது என இக்கூட்டத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

இருப்பினும் எங்கள் உரையாடலின் உள்ளடக்கத்தை இப்பொழுது பொதுவில் கூற முடியாது, கட்சியின் இதர தலைவர்களுடன் இவ்விவகாரம் தொடர்பில் கலந்தலோசித்த பின்னர் தான் எங்களின் நிலைபாட்டினை தெரிவிக்க முடியும்.

இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளும் தலைவர்களுடன்  இவ்விவகாரம் தொடர்பில் நான் தனிப்பட்ட முறையில் விவாதிப்பேன். அதே சமயம்  பல்வேறு விவகாரங்களையும் இன்று விவாதிக்க உள்ளோம் என டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ  அஸ்மின் அலி  என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker