Latestமலேசியா

காணொளி விவகாரம்: அரசியல் சூழ்ச்சிகளை பிகேஆர் ஏற்காது!-சைபுடின்

கோலாலம்பூர், ஜூன்.12- புதிதாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க கூடிய வகையிலான அரசியல் சூழ்ச்சி தந்திரங்களை பிகேஆர் கட்சி ஒரு போதும் ஏற்றுக் கொள்ளது என அதன் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் தெரிவித்துள்ளர்

அமைச்சர் ஒருவரை தொடர்புப்படுத்தி அண்மையில் சமூக வலைத் தளங்களில் பரவி வரும் வீடியோ காணொளி விவகாரத்தில் பிகேஆர் கட்சியின் நிலைப்பாடு குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டை சீர்ப்படுத்தி மேம்படுத்துவோம் என்ற நம்பிக்கையில் தான் மக்கள், பாக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். நாட்டையும் மக்களையும் முன்னேற்றம் அடைச் செய்ய உழைக்கும் அக்கூட்டணியில் பிகேஆர் கட்சியும் அங்கத்துவம் பெற்றுள்ளது.

ஆனால் மக்கள் மத்தியில் எங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சில தரப்பினர் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களின் இது போன்ற அரசியல் சூழ்ச்சிகள் நாட்டிற்கும் மக்களுக்கும் எவ்விதத்திலும் நன்மை அளிக்காது.

தற்பொழுது கூட அமைச்சர் ஒருவர் ஓரின சேர்க்கை உறவில் ஈடுபடுவதாக கூறி  காணொளி ஒன்று வலை தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அந்த காணொளியை பகிர்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவ்வறிக்கையில் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker