Latestமலேசியா

குடிநுழைவுத் துறை மீது ரிம. 2.67 மில்லியன் இழப்பீட்டு வழக்கு தொடுத்த சிங்கை பிரஜை!

கோலாலம்பூர், ஜூன்.12 – சட்ட விரோதமாகத் தம்மைத் தடுப்பு முகாமில்  வைத்து மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதற்காக சிங்கப்பூர்காரர் ஒருவர்,  மலேசிய குடிநுழைவுத் துறையின்மீது இழப்பீட்டு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

தம்மை 37 நாள்கள் சட்ட விரோதமாகத் தடுத்து வைத்ததாக  புயிஸ் கில்பர்ட் லூயிஸ் (வயது 68) என்பவர் அந்த வழக்கை வழக்கறிஞர் அருண் காசியின் மூலம் அவர் தொடுத்துள்ளார்.

2018 அக்டோபர் 9 இல் காலை 10.10 மணியளவில் தாம் ஜோகூர் பாருவில் வீடொன்றில் இருந்தபோது,  சோதனை நடவடிக்கை ஒன்றில் கைது செய்யப் பட்டதாகத் தெரிவித்தார்.

தமது விசா 2018 நவம்பர் 7 வரை நடப்பில் இருந்ததாகவும்,  அந்த வீட்டில் தாம் இருந்த போது முறையான விசாவோடு பிலிப்பினோ பெண்மணியும் மற்ற மூவரும் தங்கிருந்ததாகத் தெரிவித்தார்.

சோதனையில் அந்த வெளிநாட்டுக்காரர்களுக்குத் தாங்கள் அடைக்கலம் கொடுத்ததாக தாம் கைது செய்யப் பட்டதாகவும், அதன் உண்மையான காரணம் தமக்குத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்,

தம்முடைய உடைமைகளை கைப்பற்றிய பின்னர் போலீசார்  பெக்கான் நனாஸ் தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். கையில் விலங்கோடு தாம் 30 பேருடன் அங்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

தமக்கு ஆஸ்துமா நோய் இருப்பதால் ஜன்னலுக்குப் பக்கத்தில் இருக்க அனுமதிக்கப் பட்டது. ஆனால், மழைக் காலங்களில் அந்த இடம் ஈரமாக இருந்ததால் தாம் மிகவும் அவதிப்பட்டதாகத் தெரிவித்தார்.

அங்கு தாம் 36 நாள்கள் ஓறே அறையில் 130 பேருடன் தங்கி இருந்ததாகவும் அந்த அறை  50 பேருக்கு மட்டுமே போதுமானதாகும்.

அந்த அறையில் ஒரு கழிவறை மட்டுமே இருந்தது. தடுப்பு எதுவும் இல்லை. குடிக்க சுத்தமான நீர் தரப்படவில்லை. சுகாதாரமற்ற உணவே தரப்பட்டது. காற்றோட்டடம் இல்லை. உறங்குவதற்கு போதுமான வசதி இல்லை.

படுக்கை விரிப்பு, தலையணை, போர்வை, காலணி, சவர்க்காரம், துண்டு எதுவுமே தரப்படவில்லை. வெறும் தரையில்தான் தூக்கம். பொருள்களை வாங்கிக் கொள்ள சொந்தப் பணமே செலவழிக்கப்பட வேண்டும்.

14 நாள்களாக ஒரே உடையை மட்டுமே அணிந்ததாகவும் பலர் பல நாள்களாகக் குளிக்காமல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்

47 நாள்களாக அனுபவித்த வேதனைக்கு 840,000 ரிங்கிட், சட்ட விரோதமாகத் தாம் தடுத்து வைக்கப்பட்டதற்கு  700,000 ரிங்கிட்டும்  இழப்பீடாக கோரி அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மேலும் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படாததற்கு 370,000 ரிங்கிட், தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுக்காததற்கு 360,000 ரிங்கிட், தேவைப்பட்ட பொருள்களைத் தராததற்கு 100,000 ரிங்கிட், ஆக மொத்தம் 2.67 மில்லியன் ரிங்கிட்டை  இழப்பீடாகத் தர வேண்டுமென லூயிஸ் கோரியுள்ளார்.

அவருக்காக அந்த வழக்கை வழக்கறிஞர் அருண் காசி நடத்துகிறார். அந்த வழக்கை சுங்கத்துறை, போலீஸ் மற்றும் அரசின் மீது அவர் சார்வு செய்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker