Latestமலேசியா

குழந்தையை துன்புறுத்தும் காணொளி; தகவல் அறிந்தவர்கள் உதவுக! – காவல் துறை

கோலாலம்பூர், ஜூன்.12- பெண்மணி ஒருவர் குழந்தையை அடித்து துன்புறுத்தும் வீடியோ காணொளி தற்பொழுது சமூக வலைத் தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

சுமார் 1 நிமிடம் 36 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளி மலேசியாவில் படம் பிடிக்கப்பட்டது என நம்பப்படுகின்றது. அதில் பெண்மணி ஒருவர் சுமார் 1 வயது இருக்கக்கூடிய குழந்தையை அறை ஒன்றில் உள்ள கட்டிலில் கிடத்தி உடை அணிவிக்கின்றார். அதனுடன் அழும் அக்குழந்தையை அடித்து துன்புறுத்துகின்றார்.

மேலும் அக்குழந்தையின் சட்டையை பிடித்திழுத்து அதன் கழுத்தை நெறிக்க முற்படுகின்றார். அந்த அறையில் உள்ள ஒருவர் தான் இச்சம்பவத்தை படம் பிடித்துள்ளார்.

இக்காணொளி நேற்று தொடங்கி சமூக வலைத் தளங்களில் பரவலாக பரவி வருகின்றது. பொதுமக்கள்  அப்பெண்மணியின் செயலை கண்டித்து தங்களின் கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை என காவல் துறையின் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் டத்தோ அஸ்மாவாதி  அகமட் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல் துறையை தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker