Latestசினிமா

ஜீ.வி. பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ  சினிமாவில் அறிமுகம்

சென்னை, ஜூன்.12- ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீயும் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் குடும்பத்திலிருந்து வந்தவர் ஜிவி பிரகாஷ். சினிமா சார்ந்த துறை இயல்பாகவே இந்த இசைக் குடும்பத்துக்கு பழக்கப்பட்ட ஒன்றாகும்.

ஜீவி முதலில் இசை அமைப்பாளராக பிரவேசம் ஆனார். பின்னர் சினிமா கதாநாயகனாக மறு பிரவேசம் எடுத்தார். அதனுடன் நடன கலைஞராகவும் உருமாறினார். தற்போது அதே குடும்பத்தில் இருந்து மற்றொருவர் நடிகையாகும் ஆசையில் சினிமாவுக்கு நுழைகிறார்.

ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ தற்போது விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார் .

இந்தப் படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். பவானி இரண்டாவது நாயகியாக அறிமுகம் ஆகிறார். அவரது நடிப்பினை கண்டு ரசிக்க ஜீவியின் ரசிகர்கள் பலர் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker