Latestமலேசியா

டத்தோ கோங் சிலை வழிபாடு – பிணையில் ஆடவர் விடுதலை

பாகான் செராய், ஜூன் 12 – முஸ்லிம்களின் தொழுகை உடையணிந்து தஞ்சோங் பியான்டாங்கில் டத்தோ கோங்  சிலை வழிபாட்டை மேற்கொண்ட நபர் நேற்று போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அவர் பாரிட் புந்தார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு  தடுப்புக்காவல் நீக்கப்பட்டதாகக் கிரியான் போலீஸ் தலைவர் ஓமார் பக்தியார் யாக்கோப் தெரிவித்தார்.

அந்த நபரைப் பற்றிய விசாரணை முடிவுக்கு வந்ததால்,  அவர் பிணையில் விடுவிக்கப் பட்டார். அந்த நபர் நேற்று முன்தினம்,  கிரியான் போலீஸ் நிலையத்துக்குச் சென்று தாமாகவே சரணடைந்தார்.

மீனவரான அவர், டத்தோ கோங் வழிபாடு நடத்தும்  வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker