Latestமலேசியா

‘தனக்கு “யார் நண்பன், யார் எதிரி?” தெரியாத நிலையில் பிரதமர்!” -ஐஜிபி தகவல்

கோலாலம்பூர், ஜூன்.12- 15 வருடங்கள் பிறகு மீண்டும் நாட்டின் பிரதமராக பதவியேற்ற பொழுது “யார் நண்பன், யார் எதிரி” என்பதனை அடையாளம் காண முடியாததால் பல்வேறு பிரச்னைகளை எதிநோக்கினேன் என துன் மகாதீர் தம்மிடம் கூறியதாக அரச மலேசிய காவல் படை தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹமீட் படோர் தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற நான் மீண்டும் பணிக்கு திரும்பியது குறிப்பிட்ட ஒரு சம்பவத்தில் தான். அன்றைய தினம் காலையில் நான் ரெம்பாவில் உள்ள எனது காய்கறி தோட்டத்தில் இருந்தேன். அப்பொழுது பிரதமர் என்னை சந்திக்க விரும்புவதாக அழைப்பு வந்தது.

உடனே எனது இல்லத்திற்கு விரைந்தேன். படபடப்பில் பழைய “ஜெக்கட்” சட்டை அணிந்து கொண்டு எனது கிராமத்திலிருந்து புத்ரா ஜெயாவிற்கு சென்று பிரதமரை சந்தித்தேன். அச்சந்திப்பில்  பிரதமர் என்னை மீண்டும் பணிக்கு திரும்பி தமது உதவ அழைத்தார். எனக்கு காவல் படையின் சிறப்பு பிரிவு இயக்குனர் பதவி வழங்க முன் வந்தார்.

நான் முன்னதாக ஓய்வு பெற்று விட்டதால் மீண்டும் பணியில் இணைய பல்வேறு இடையூறுகள் உள்ளது என அவரிடத்தில் கூறினேன். ஆனால் தனது முடிவில் தெளிவாக இருந்த பிரதமர், இவ்விவகாரத்தை சரி செய்ய தான் தலைமைச் செயலாளரிடம் பேசுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்ற தனக்கு, சிறந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு உடன் இருப்பவர்களில் யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்பதனை அடையாளம் காண சிரமம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்ற எனக்கு, சிறப்பு பிரிவு இயக்குனர் பதவி ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது. இருப்பினும் இடைப்பட்ட காலத்தில் அரச மலேசிய காவல் படை தலைவர் பதவிக்கும் எனது பெயர் பரிசீலனை செய்யப்பட்டு  வருவதாக கேள்வியுற்றேன்.

ஆனால் நான் அந்த வாய்ப்பினை மறுத்தது மட்டுமின்றி அப்பதவிக்கு சிலரின் பெயர்களையும் முன் மொழிந்தேன். ஆனால் இறுதியில் அப்பொறுப்பிற்கு நானே தேர்வு செய்யப்பட்டேன் என அவர் விவரித்தார்.

இதற்கிடையே எனக்கு வழங்கப்பட்ட அரச மலேசிய காவல் படை தலைவர் பதவியில் நான் இறுதி வரை நேர்மையாக பணியாற்றுவேன் என குறிப்பிட்ட டத்தோஶ்ரீ அப்துல் ஹமீட் படோர், தன் மீது இவ்வளவு தூரம் நம்பிக்கை வைத்த பிரதமருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker