Latestசினிமா

நடிகர் சங்கத் தேர்தல்: பாக்யராஜ் அணிக்கு பின்னடைவு 

சென்னை, ஜூன்,12- நடிகர் சங்கத் தேர்தலில் கே. பாக்கியராஜ் அணியிலிருந்து மூன்று நடிகர்களின் மனு நிராகரிக்கப்பட்டதால் அவரது அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இச்செய்தி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. விஷால்- நாசரின் பாண்டவர் அணிக்கு எதிராக கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கணேஷ் தலைமையிலான குழு உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி தேர்தலில் வரும் தேர்தலில் போட்டியிடுகிறது .

விஷாலின் பாண்டவர் அணியில் போன முறை போட்டியிட்டவர்கள் அதே பதவிக்காக இந்த முறையும் போட்டியிடுகின்றனர்.  மனுத் தாக்கல் முடிந்த வந்த நிலையில் பாக்கியராஜ் அணியை சேர்ந்த நடிகர் விமல், நடிகை ஆர்த்தி, நடிகர் ரமேஷ் கண்ணா ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன .

இதனால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மனுத் தாக்கல் செய்பவர்கள் அல்லது மனுவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டவர்கள் சந்தாத் தொகை கட்டாவிட்டால் அவர்களது மனு நிராகரிக்கப்படும். இந்த அம்மூவரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பாக்கியராஜ் தலைமையிலான அணிக்கு இது மிகப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் இது பற்றி கருத்து கூறியுள்ள நடிகர் ரமேஷ்கண்ணா ”நாங்கள் எல்லாம் மனுக்களையும் மிகச் சரியாகவே செய்துள்ளோம். எங்களது சந்தா தொகை சரியாக செலுத்தப்பட்டுள்ளது. எங்கள் மனுக்களை தள்ளுபடி செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker