Latestமலேசியா

நீரழிவு நோய்க்கான இலையை வாங்குவதாகக் கூறி கும்பல் திருட்டு

பொந்தியான், ஜூன்.12 – நீரழிவு நோய் இருப்பதாக கூறி, அந்நோயை குணப்படுத்தும் இலையை வாங்குவது போல் நடித்து, வயோதிகர் ஒருவரின் வீட்டில் புகுந்து கொள்ளை அடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று மதியம் 1.30 மணியளவில், ஜாலான் பாரிட் பெனோட் எனும் இடத்தில், மூன்று நபர்கள் சுமார் 2,000 ரிங்கிட் மதிப்புள்ள தங்க வளையல்களை 73 வயது முதிய பெண்மணியிடமிருந்து   கொள்ளை அடித்துச் சென்றதாக பொந்தியான் மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி முஸ்தாபா பக்ரி சாலே தெரிவித்தார்.

இரண்டு பெண்கள் மற்றுமொரு ஆண், கொண்ட கும்பல் ஒன்று புரோட்டோன் இன்ஸ்பிரா வெள்ளை நிறக் காரில் வந்ததாகத்  தெரிய வந்துள்ளது. அந்தக் கும்பலில் இருந்த  ஆணும் பெண்ணும், அந்தப் பெண்மணியிடம் அவர்களுக்கு நீரழிவு நோய் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

மேலும், அந்நோயை தீர்க்கும் இலையைக் கேட்டுள்ளனர். அதனைப் பெற்ற பின்னர், அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்மணி வீட்டினுள் சென்று பார்க்கும் போது, சமையலறையில் அவரின் கைப்பை இடம் மாறி இருப்பதை உணர்ந்திருக்கிறார்.

கைப்பையைத் திறந்து பார்க்கும் போது, அதனுள் இருந்த பணம் மற்றும் தங்க வளையல்களைக்  காணவில்லை. வீட்டுக்கு வந்த இருவரில், அந்த பெண் தான் இச்செயலை புரிந்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் காவல் நிலையத்தில் பெனோட் புகார் செய்துள்ளார்.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம், பிரிவு  380 இன் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக முஸ்தாபா பக்ரி கூறினார். மேலும், இது தொடர்பாக, பொதுமக்கள் தகவல் கிடைத்தால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker