Latestமலேசியா

பணம் கேட்டு தாய்க்கே கொலை மிரட்டல்: மகன் கைது!

பத்து காஜா , ஜூன். –  கம்போங் ஆரா பாயுங்கில் தான் கேட்ட பணத்தைக் கொடுக்க மறுத்த  தாய்க்குக் கொலை மிரட்டல் விடுத்த ஆடவன் ஒருவனை காவல்துறை கைது செய்தது.

பத்து காஜா மாவட்ட காவல்துறை அதிகாரி ஏசிபி அகமட் அட்னன் பஸ்ரி குறிப்பிடுகையில், சந்தேகத்திற்குரிய  அந்த 33  வயது ஆடவன் 71 வயது  தாய்க்குக் கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் புகார் கிடைத்தைத் தொடர்ந்து கைது செய்தாக அவர் குறிப்பிட்டார்.

பிற்பகல் 1 .15 மணி   அவன்  வீட்டில் இருந்த தன் தாயிடம் பணம் கேட்டு மிரட்டியதாக அவர் சொன்னார்.  கேட்ட பணத்தை அந்தத்தாய் கொடுக்க மறுத்ததைத் தொடர்ந்து  அவரை அந்த ஆடவன் கொலை செய்யப் போவதாக  மிரட்டியுள்ளான். அதைத் தொடர்ந்து, பயந்து  போன அத்தாய் உதவி கேட்டு அண்டை அயலாரை நாடி பின்னர்,  காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.

அப்புகாரில் தாம் தம் இளைய மகனான அந்த நபருடன்  ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். நிரந்தர வேலை ஏதும் இல்லாத அவன் போதைப் பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது போன்ற கொலை மிரட்டல்  விடுத்தது இது இரண்டாவது முறை என்பதால்  பரிதாபத்திற்குரிய அந்தத் தாய் புகார் அளித்துள்ளார். கடந்த ரமலன் மாதத்தின் போதும் இம்மாதிரியான  சம்பவம் நடந்ததாக அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.

மூன்று  குற்றப்  பின்னணிகளைக்  கொண்ட அந்த நபரை நான்கு மணியளவில் காவல் துறை தடுத்து  வைத்திருப்பதாக  ஏசிபி அகமட்  அட்னன் பஸ்ரி தெரிவித்தார்.

சிறுநீர் பரிசோதனை அறிக்கையில் அந்நபர் போதைப் பொருள் உட்கொண்டது நிரூபணமானது. அதனைத் தொடர்ந்து, வழக்கு குற்றவியல் சட்டம், பிரிவு 506 இன் கீழ் விசாரணை நடத்தப்படுமென்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker