Latestமலேசியா

பினாங்கில் டிங்கிக் காய்ச்சல் எண்ணிக்கை சரிவு!

பினாங்கு 11 ஜூன் – பினாங்கில் டிங்கிக்  காய்ச்சலின் எண்ணிக்கை கடந்த வாரத்தினைக் காட்டிலும் 1.52 அல்லது ஒரு விழுக்காடாகக் குறைந்து உள்ளது.

மாநில சுகாதார திணைக்களத்தின் சுகாதார பிரிவின் அறிக்கையின்படி இம்மாதம் ஜூன் 2 இல் இருந்து 8 ஆம் திகதி வரை சுமார் 65 டிங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் , இது கடந்த மே 26 முதல் ஜூன் 1  வரை பதிவாகிய 66  டிங்கி காய்ச்சல் சம்பவங்களை  காட்டிலும் ஒரு விழுக்காடு சரிந்துள்ளது.

இவ்வறிக்கையைத்  தொடர்ந்து கடந்த 8 ஜூன் மாதத்தில் இருந்து  2 ,808  சம்பவங்கள் பதிவாகிய நிலையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வெண்ணிக்கை  961 -ஆக அல்லது 52 03 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு 22ஆவது வாரத்திலிருந்து 8  டிங்கிக் காய்ச்சல் மரண சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இது 300 சதவிகிதம் அல்லது  ஆறு இறப்புக்கள் அதிகரிப்பதாக காட்டுகிறது. வடக்கு கிழக்கு (3), மத்திய செபபராங் பிறை  (6), தென் செப்பராங்  பிறை (1) போன்ற பாதிக்கப்பட்ட  10  இடங்கள்  உள்ளன.

கொசுக்கள் அதிகம் இனவிருத்தி செய்யும் இடங்களை அடையாளம் கண்டு துப்புரவுப் பணியில் ஈடுபடுமாறு பொதுமக்களை சுகாதாரத் துறை அறிவுறுத்துகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker