Latestமலேசியா

பூனையை தூக்குப் போட்டு கொன்ற ஆடவன்! -கேராமில் ‘பகிர்’ காட்சி!

கோலாலம்பூர், ஜூன் 12- வங்சா மாஜூ , புலோக் பாங்சாபூரி செக்‌ஷன் 2இன் அடுக்குமாடி வீடொன்றில் பூனையின் கழுத்தைக்  கயிற்றினால் கட்டி அதனை படிக்கட்டில் தொங்கவிட்டு சாகும் வரை துன்புறுத்திய ஆடவனின் மனிதாபமற்ற செயலானது சிசிடிவி  காமிராவில் பதிவாகியுள்ளது.

அப்பூனையின் உரிமையாளரான அஸ்ருல் மதியம் 2.30 மணியளவில் வியாபாரம் முடிந்து வீடு திம்பியபோது பூனை இறந்து கிடப்பதைக் கண்டதாகத் தெரிவித்தார்.

ஆரம்பத்தில்,  தம்முடைய செல்ல பூனை விஷம் கலந்த உணவை உட்கொண்டதால் இறந்திருக்கக் கூடும் என எண்ணினார்.   பின்னர்  அண்டை வீட்டுக்காரர்  தம்மிடம் காட்டிய ரகசியக் காமிரா பதிவினைக் கண்டு அவர் அதிர்ச்சிக்கு உள்ளாகியதாகத் தெரிவித்தார்.

அந்தக் காணொளியில்,  அடையாளம் தெரியாத ஆடவன் ஒருவன் அஸ்ருலின்  பூனையைப் பிடித்து அதன் கழுத்தில் கயிற்றைக் கட்டிய பின்னர்,  அப்பூனையை படிக்கட்டில் தொங்க விடுவது அக்காணொளியில் பதிவாகியுள்ளது.

அந்தக் காணொளியில் , முதலில் பூனையை படிக்கட்டில் சரியாகக் கட்டாததால்; அப்பூனை அங்கிருந்து தப்பியது.  அதைக் கண்ட அந்த ஆடவன்  திரும்ப அப்பூனையைச் சாகும் வரை இறுக்கமாகக்  கட்டியுள்ளது அக்காணொளியில் பதிவாகி உள்ளதாக வங்சா  மாஜூ போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

இவ்வட்டாரத்தில் இது போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறையாகும் என்றும் சம்பந்தப்பட்ட ஆடவர் வங்சா மாஜுவைச் சேர்ந்தவர் அல்ல என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் சம்பந்தப்பட்ட அந்த ஆடவருக்குத் தகுந்த தண்டனை கொடுத்து இது போன்ற மனிதாபிமானமற்றச் செயலை யார் புரிந்தாலும் அவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று அப்பூனையின் உரிமையாளரான அஸ்ருல் தெரிவித்தார்.  இச்சம்பவம்   குற்றவியல் சட்டம், பிரிவு 428இன் கீழ் விசாரணை நடத்தப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker