Latestமலேசியா

பெம்பான் வீட்டு மனை நிலத்திட்டம் : நிலத்தைக் கோரி மக்கள் மகஜர்!

ஈப்போ, ஜூன். 12. புந்தோங் வட்டாரத்தில் புறம்போக்கு நில பிரச்சனையைத் தீர்kக உருவாக்கப்பட்ட பெம்பான் மறுகுடியேற்ற நிலத்திட்டத்தில் அரசாங்கம் அறிவித்தபடி 133 குடும்பங்களுக்கு நிலத்தை வழங்க கோரி மாநில மந்திரி புசார் அலுவலகத்தில் மகஜர் வழங்கினர்.

சுமார் 586 பேருக்கு வீட்டு மனை அல்லது வீடு வேண்டும் என்ற கோரிக்கைக்குச் செவி சாய்த்து முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் இவர்களின் மறு குடியேற்ற மேம்பாட்டு திட்டத்திற்காகப் பெம்பானில் சுமார் 145 ஏக்கர் நிலத்தை ஒதிக்கியது.

2017ஆம் ஆண்டு, 586 பேரில் முதல் கட்டமாக 397 பேர் நேர்முக பேட்டிக்கு அழைக்கப்பட்டு, அதில் கொடுக்கப்படும் வீட்டு மனையில் உடனே வீடு கட்டிக்கொள்ள முடிந்த 133 பேர் முதல் பட்டியலில் தேர்வாகினர், மீதம் உள்ளவர்களுக்கு அடுத்தடுத்த கட்டமாக நிலம், வீடு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டு 14ஆம் பொதுத் தேர்தலின் வெற்றிக்குப் பிறகு ஜூன் மாதம் பேரா மாநில நம்பிக்கை கூட்டணியின் இந்திய ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர்  சிவக்குமார் மற்றும் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி. சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்த மறுகுடியேற்ற திட்டத்தை மறு உறுதிp படுத்தியதோடு 2018ஆம் ஆண்டு தீபாவளி பரிசாக நிலப் பட்டா வழங்கப்படும் என்றும் அறிவித்தனர்.

ஆனால், 9-02-2019 புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம் இந்த மறுகுடியேற்ற திட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ரத்துச் செய்யப்படுவதாக அதிர்ச்சியானச் செய்தியை வெளியிட்டார்.

இதனை பெம்பான் நிலத்திட்டத்தில் நிலம் கிடைத்த 133 குடும்பங்களும் எதிர்ப்பை தெரிவித்தனர். இன்று காலை 11 மணியளவில் ஒன்று திரண்ட மக்கள், பெம்பான் நிலத்திட்டத்தில் நில கோரிக்கையை பெம்பான் நில நடவடிக்கைத் தலைவர் ஜெ. தேவசிவாமணி மகஜரை மாநில அரசாங்க அலுவலகத்தில் ஒப்படைத்தார் . அதனை மாநில மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரி கைருள் ஷாருள் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் மாநில மந்திரி புசார் அலுவலகம் முன் ஒன்று திரண்ட மக்களுக்கு ஆதரவாக மாநில ம.இ.கா தலைவர் டத்தோ வி. இளங்கோ , ஈப்போ பாராட் தொகுதி காங்கிரஸ் தலைவர் எஸ் . ஜெயகோபி மற்றும் பல அரசு சாரா இயக்கங்களின் தலைவர்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்வில் அந்த நிலம் தொடர்பான விளக்கங்களை செய்தியாளர்களிடம் கூறினார்.


முன்னதாக பேசிய மாநில மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியான கைருள்,  இந்த விவகாரம் ஏற்கனவே மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைசாலின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனை அவர பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.  இந்த விவகாரம் தொடர்பாக இன்னும் சில வாரங்களில் மந்திரி புசார் முடிவினை அறிவிப்பார் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார் . 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker