Latestமலேசியா

போதைப் பொருள்- 72,891 பேர் கைது

கோலாலம்பூர், ஜூன் 12 – இவ்வாண்டு ஐந்து மாதங்களில் நாடளாவிய நிலையில் மொத்தம் 72,891 பேர் போதைப் பொருள் குற்றங்களுக்காகக் கைது செய்யப் பட்டுள்ளனர்.

அதில் 67,887 பேர் உள்ளூர்க்காரர்கள்  என்றும் 5,005 பேர்  வெளிநாட்டினர் எனவும் புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்பு பொறுப்பு இயக்குநர் கமாருல்ஸமான் மாமாட் தெரிவித்தார்.

34,342 பேர் போதைப்பொருள் உட்கொண்டதற்காகவும், 27488 பேர் சட்ட விரோதமாகப் போதைப் பொருளை வைத்திருந்து இருந்ததற்காகவும்11,061 பேர் கடும் போதைப் பொருளை வைத்திருந்து இருந்ததற்காகவும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளில் ஷாபு, கெத்தாமின், எராமின், யாபா மாத்திரைகள், ஏக்ஸ்டசி மாத்திரைகள், கென்னாபிஸ், ஹெரோயின்  ஆகியவை அடங்கும்.

அந்தக் காலக்கட்டத்தில் 204,77 மில்லியன் ரிங்கிட் பெறுமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட வேளையில், 34.93 மில்லியன் ரிங்கிட் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker