Latestமலேசியா

மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்துடன் ஒரு கலந்துரையாடல்

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.12-  அண்மையில் இங்குள்ள விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் “மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்துடன் ஒரு கலந்துரையாடல்” எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 60 அரசு சாரா இயக்கங்களின் பிரதிநிதிகள் , சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காப்பகத்தின் செயலாளர் முனைவர் இரா. குமரவேல் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கினார். கடந்த ஆண்டு 17 நவம்பரில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு  இன்று  மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம் அமைய வித்திட்டதாக அவர் தமதுரையில் தெரிவித்தார்.

மலாய் மொழியின் பயன்பாட்டையும் வளர்ச்சியையும் பேணிக் கண்காணிக்கும் ‘தேவான் பகாசா டான் புஸ்தாகா’ போன்று தமிழ்மொழியைக் காக்க மலேசியாவில் ஓர் அரசு சார்புடைய இயக்கம் அல்லது நிறுவனம் இல்லை என்ற குறை நெடு நாளாக இருந்து வந்தது. அந்தக் குறைபாடு இப்போது நீங்கி இருப்பதாகவும் குமரவேல் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ தெய்வீகன், தொடக்கம் முதல் இன்று வரையிலான காப்பகத்தின் பதிவு , கட்டமைப்பு முறைகள் குறித்து, காப்பகத்தின் திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும் அவர் காப்பகத்தின் மதியுரைஞர், செயற்குழு உறுப்பினர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகலையும் பகிர்ந்துக் கொள்ள கலந்து கொண்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களும் பல திட்டங்களை முன் வைத்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker