Latestமலேசியா

“மலேசியா என்னை இந்தியாவுக்கு அனுப்பாது” -ஸாக்கிர் உறுதி

கோலாலம்பூர், ஜூன் 12 –  மலேசிய அரசு என்னை இந்தியாவுக்கு அனுப்பாது என நான் முழுமையாக நம்புகிறேன் என சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நாயக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாத்துக்கு எதிராகச் செயல்படும் இந்தியாவின் கூற்றுக்கு மலேசியா செவி சாய்க்காது என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு நவம்பரில் தமக்கு மலேசியா தொக்கோ மால் ஹிஜ்ரா எனும் மிக உயரிய விருதினை வழங்கியது.  எனது செயல்பாடுளைத் தெளிவாகத் தெரிந்தே பின்னரே அந்த விருது அளிக்கப்பட்டது.

தாம் அந்த விருதினை பெற்ற நான்காவது வெளிநாட்டுக்காரர். தம்மை நாடு கடத்த முயன்ற இந்தியா இரு முறை தோல்வி கண்டதாகவும் தற்போது பண முறைகேட்டு வழக்கில் தம்மைச் சம்பந்தப்படுத்தி நாடு கடத்த முயற்சி செய்வதாக ஸாக்கிர் தெரிவித்தார்.

இண்டர்போல் தமக்குச் சாதகமாக இருப்பதாவும் தம்மை இந்தியாவுக்கு அனுப்ப சிவப்பு நோட்டிஸைத் வெளியிடாது எனத் தாம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker