Latestஇந்தியா

லண்டனில் ஏலம்: சாதனை படைத்தது இந்தியரின் ஓவியம்!

புதுடில்லி, ஜூன்.12- இந்திய ஓவியர் வரைந்த ஓவியம் ரூபாய் 22 கோடியே 39 லட்சத்து விற்பனையாகி சாதனை படைத்தது.
பூபன் காகர் 1934ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவர் 2003 ஆம் ஆண்டு காலமானார். இருப்பினும் அவரது ஓவியங்கள் அனைத்தும் அனைத்துலக அளவில் புகழ் பெற்றவை.

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த கய் ஹெலன் பார்பியர் ஆகியோர் சேகரித்து வைத்திருந்த காகர் உள்ளிட்ட இந்திய ஓவியர்களின் 29 ஓவியங்கள் லண்டனில் உள்ள சூத்பி ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டன.

அவற்றில் பூபன் காகர் 1982 ஆம் ஆண்டு வரைந்த ‘டூ மென் இன் பெனராஸ்’ என்ற ஓவியம் ரூபாய் 22 கோடியே 39 லட்சத்து விலை போனது. இதன் மூலம் அவரது 1972ஆம் ஆண்டில்  9 கோடியே 71 லட்சம் ரூபாய் சாதனையை படைத்த இந்த ஓவியத்தின் இலக்கு இம்முறை  முறியடிக்கப்பட்டது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker