Latestமலேசியா

வாடிக்கையாளரிடம் பொருளை ஒப்படைக்க ‘லம்போஜினி’ காரில் சென்ற 14 வயது சிறுமி

கோலாலம்பூர், ஜூன்.12 – ஓர் அழகு சாதனப் பொருள் நிறுவன தொழிலதிபரின் மகள், வாடிக்கையாளர்கள் கேட்ட பொருளை நேரில் சென்று கொடுப்பதற்காக லம்போஜினி காரில் பயணம் செய்தது சமூக ஊடகங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

14 வயது சிறுமி, வீட்டிலிருந்து காரை ஓட்டுச் சென்று சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் சால்மன் சொல்டட் ஏக் (Salmon Salted Egg) எனப்படும் உணவுப் பொருளை ஒப்படைக்கும் வரையிலான காணொளி ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Video Source: cikb_havoc66 instagram

அதனைத் தொடர்ந்து அது சமூக வலைத் தளவாசிகள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

சிலர் வியந்து,  இந்தச் சிறுவயதில் தைரியமாக விலையர்ந்த காரை ஓட்டுகிறார் என்று பாரட்டியுள்ளனர். மேலும், சிலர்  அவர் மிக அதிர்ஷ்டசாலியான பெண். காரணம் இந்த சிறு வயதிலேயே ‘லம்போஜினி காரை ஓட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது என பெருமிதம் கொண்டனர். அதிலும் சிலர், வாகன உரிமம் இல்லாமல் ஓட்டுவது மிகவும் ஆபத்தான செயல் என்றும் குறை கூறியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker