Latestஇந்தியா

குடிநீர் பஞ்சம்: தவிக்கிறது சென்னை! ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை!

சென்னை, ஜூன், 13 – சென்னையில் குளிக்கவோ, குடிக்கவோ தண்ணீர் இல்லை. எனவே, ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு சென்னையில் உள்ள ஐடி  நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன.

இதுவரை 12 நிறுவனங்கள் 5 ஆயிரத்துக்கு அதிகமான ஊழியர்களுக்கு இவ்வாறு உத்தரவிட்டுள்ளன.  சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.  சென்னையைச் சுற்றிலும் பல்வேறு இடங்களில் சுமார் 600 ஐடி நிறுவனங்கள் செயல்படுகின்றன.  அவற்றில் 55 நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்துகின்றன.

இந்த நிறுவனங்களில் மட்டும் 3.2 லட்சம் ஐடி ஊழியர்கள் பணியாற்றுகின்றன.ர் இவற்றில் பல நிறுவனங்கள் குடிநீரையும் வீட்டிலிருந்து கொண்டு வந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றன.

12 நிறுவனங்களைச் சேர்ந்த  5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற பணித்துள்ளனர். இதில் ஓஎம்ஆர் ரோட்டில் உள்ள ஐடி  நிறுவனங்களுக்கு மட்டும் தினசரி 3 கோடி லிட்டர் தண்ணீர் தேவை . சிப்காட்டில் உள்ள 46 நிறுவனங்களுக்கு தினசரி 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை .

இவற்றில் பெரும்பாலும் மெட்ரோ தண்ணீர் மூலமும் 17 கிணறுகள் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. இப்போது மெட்ரோ தண்ணீர் கிடைப்பதில்லை. கிணறுகள் வறண்டு விட்டன. நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

எனவே, குடிநீர் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. தனிப்பட்ட அதிக விலை கொடுத்தும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்  ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற பணித்துள்ளன. கடந்த 20 நாட்களாக மழை பெய்யாத நிலையில் அடுத்து 100 நாட்களை எப்படி சந்திப்பது என்ற கவலை சென்னைவாசிகளை சூழ்ந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker