Latestமலேசியா

பூர்வ குடியினரை தாக்கும் மர்ம நோய் ! – 12ல் 8 சமாதிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன

குவா மூசாங்,ஜூன்.13 – இப்பகுதியில் உள்ள பூர்வ குடியினர் மக்களின் தொடர் மரணங்களுக்கான காரணத்தை கண்டறிய வேண்டி தேடப்பட்டு வந்த 12 பாதேக் இன மக்களின் சமாதிகளில்,  இதுவரை 8 சமாதிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, சமூக முன்னேற்றத் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்தார்.

பெரும் சவால்களைக் கடந்து அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடங்களை கண்டு பிடித்துள்ளோம். தேடுதல் பணியினர் காடுகளில் உள்பகுதி வரை சென்று அடக்கம் செய்த இடங்களை தேடி வருகின்றனர். சில இடங்களுக்கு  படகு மூலம் சென்று தேடுதல் பணிகளை மேற்கொள்ள நேர்ந்தது.

இதுவரை 8 சமாதிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களை தேடும் பணிகள் தொடரும் நிலையில் கூடிய விரைவில் அவ்விடங்களை கண்டு பிடித்து விடுவோம். அவர்களின் உடல்கள் மீது முறைப்படி சவப்பரிசோதனை  மேற்கொள்ளப்படும். இந்த செயல்முறைக்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது என அவர் விவரித்தார்.

இதற்கிடையே, இந்த அடையாளம் காணப்படாத நோயினால் பாதிப்புற்ற 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் தற்பொழுது அருகாமையில் உள்ள ஓய்விடத்தில் உள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker