Latestமலேசியா

வாங் கெளியான்: முகாம் கண்டுபிடிக்கப் பட்ட பின்னரும் ஆள்கடத்தல் நடந்தது

புத்ரா ஜெயா, ஜூன் 13 – 2015ஆம் ஆண்டு வான் கெளியான் ஆள்கடத்தல் முகாம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தாலும்  அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு ஆள்கடத்தல் நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன.

2015ஆம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து மே வரை அங்கு ஆள்கடத்தல் நடவடிக்கைகள் நடை பெற்றிருப்பதாக அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பிரேதங்களின் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

பிரேத பரிசோதனையில், சம்பந்தப்பட்ட நபர்கள் 2015க்கு 4 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்திருக்கலாம் என தெரிய வந்ததாக தடயவியல் நிபுணர் டாக்டர் முகமட் சுஹானி முகமட் நூர் தெரிவித்தார்.

தாம் 100 பிரேதங்களுக்கு மேல் பரிசோதனை நடத்தியதாகவும் அதில் சிலர் இறந்து சில வாரங்களாகவும்,  சிலர் இறந்து பல  ஆண்டுகளாக இருக்கும் என தெரிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தடயவியல் துறை 108 பிரேதங்களைப் பெற்றதாகவும் அதில் 16 பிரேதங்களின் நபர்களுக்கு 10லிருந்து 20 வயதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இருவரின் மரணங்களுக்கான காரணம் தெரிய வந்ததாகவும் மற்றவை அழுகி மக்கிப் போனதால்,  காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker