Latestஇந்தியா

விஷாலுக்கு  பள்ளி மாணவியுடன் தொடர்பா? அவதூறு பரப்பிய பெண் கைது!

சென்னை, ஜூன். 13 – மாணவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக நடிகர் விஷால் பற்றி பெண் ஒருவர் சமூக ஊடகத்தில்  அவதூறு பரப்பியதன் காரணமாக சம்பந்தப்பட்ட பெண் கைது செய்யப்பட்டார்.

.அந்த பெண்,  தன் பக்கத்து வீட்டு பள்ளி மாணவி ஒருவரிடம்  ஏற்பட்ட தகராறில்  அம்மாணவியை விஷாலோடு தொடர்பு படுத்தி   ஆபாசமாக  அவதூறு கூறி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

மேலும்   நடிகர் விஷாலுடன் தொடர்புபடுத்தி மிக ஆபாசமான படங்களையும் கருத்துக்களையும் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு இருந்ததைக் கண்டு மாணவியின் குடும்பத்தினர் அதிர்ந்து போயினர்.

அந்த மாணவியின்  தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸ் ஆபாச அவதூறு தொடர்பாக  விசாரணை நடத்தி வந்தனர். தற்போது போலிசார் திருச்செங்கோட்டில் அவதூறு பரப்பிய பெண்ணை கைது செய்துள்ளனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் காவலில் வைக்கப் பட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker