Latestமலேசியா

அஸ்மினை வீழ்த்த பகடையாக ஆனேன்!!-ஹாஸிக் கூறியதாக ஹில்மான் தகவல்

கோலாலம்பூர், ஜூன்.14- பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை வீழ்த்துவற்கு தான் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டதாக முகமட் ஹாஸிக் அப்துல் அஸிஸ் என்னிடம் தெரிவித்தார் என அமைச்சரின் அரசியல் செயலாளர் முகமட் ஹில்மான் இடாம் தெரிவித்தார்.

அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஓரின சேர்க்கை காணொளி வெளிவருவதற்கு முன் (ஜூன்.11)  நான் முகமட் ஹாஸிக்கை புத்ரா ஜெயவில் உள்ள உணவகம் ஒன்றில் சந்தித்தேன் என நேற்று முகமட் ஹில்மான் ஒப்புக் கொண்டார். ஆனால் இச்சந்திப்பின் உள்ளடக்கத்தை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.

இந்நிலையில் அச்சந்திப்பின் பொழுது, டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை வீழ்த்த முன் வைக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சியில் நான் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டுள்ளேன்.  அந்த காணொளியில் இருப்பது நான் கிடையாது. அந்த காணொளியும் உண்மை கிடையாது என முகமட் ஹாஸிக் என்னிடம் கூறினார் என முகமட் ஹில்மான் இன்று விவரித்துள்ளார்.

மேலும் இவ்விவகாரம் தொடர்பில் தன்னுடைய பெற்றோர்களுக்கு தகவல் தெரிப்பது குறித்து என்னிடம் கருத்துக் கேட்டார். நான்  அம்முடிவை ஏற்று (பெற்றோர்களிடம் தகவல் தெரிவிப்பது) அவரை பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்.

இன்னும் சொல்லப் போனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குடும்பம் தான் மிகவும் முக்கியம் . குடும்பத்தின் உணர்வுகள், கண்ணியம், மரியாதையை பாதுகாக்க வேண்டும் என நான் அவருக்கு அறிவுறுத்தினேன் என கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினருமான அவர் விவரித்தார்.

இதற்கிடையே முன்னதாக முகமட் ஹாஸிக் வழங்கிய புகார் முற்றிலும் பொய் எனக் கூறி இன்று முகமட் ஹில்மான்  புத்ரா ஜெயா காவல் தலைமையகத்தில் புகார் வழங்கியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker