Latestமலேசியா

அஸ்மின் தங்குமிட விவரங்களை ஹாஸிக் என்னிடம் தான் விசாரித்தார்!- பிலிசன் தகவல்

கோலாலம்பூர், ஜூன்.14- சாண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பிரச்சார நேரத்தில் பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தங்கியிருந்த இடம் குறித்த விவரங்களை முகமட் ஹாஸிக் அப்துல் அஸிஸ் அறிந்திருக்க வாய்ப்பில்லை என சபா மாநில பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் பிலிசன் ஸைனூடீன் தெரிவித்தார்.

அந்த இடைத் தேர்தல் சமயத்தில் (ஏப்ரல் 27 தொடங்கி மே 10ஆம் தேதி வரை) முகமட் ஹாஸிக் தினமும் என்னை தொலைப்பேசி, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தங்கியிருக்கும் இடம், அவரின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை கேட்பார். நான் முதலில் மறுத்தாலும் பிறகு அடிப்படை அரசியல் கடமைகளைக் கருதி இத்தகவல்களை பகிர்ந்தேன்.

இந்நிலையில் கடந்த மே 10ஆம் தேதியன்று முகமட் ஹாஸிக் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு தாம் முன்னதாக டத்தோஶ்ரீ அஸ்மின் அலி  குறித்து விசாரித்ததை யாரிடமும் கூற வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வாறு அவர் கேட்டுக் கொண்டது எனக்கு விசித்திரமாக தோன்றினாலும் அது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை.

ஆனால் இப்பொழுது அந்தக் காணொளியில் இருப்பது அவரும் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியும் தான் என முகமட் ஹாஸிக் கூறியுள்ளார். இச்சூழ்நிலையில் நான் அங்கு நடந்த சம்பவங்களை பொதுவில் அம்பலப்படுத்த கடமைப்பட்டுள்ளேன் என இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் விவரித்தார்.

மேலும் ஒரு வேளை அவ்விருவரும் நிஜமாகவே உறவு வைத்திருந்தால் முகமட் ஹாஸிக் நேரடியாகவே  டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை தொடர்பு கொள்ளலாம் அல்லவா,  பிறகு  என்னிடம் எதற்கு தகவல் கேட்டறிந்தார்? என்ற கேள்வியையும் பிலிசன் ஸைனூடீன் முன் வைத்தார்.

சண்டாக்கான் இடைத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிகேஆர் தலைவர்களின் தங்குமிட வசதிகளை பிலிசன் ஸைனூடீன் தான் கவனித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker