Latestமலேசியா

ஆற்றில் விழுந்த சிறுவன் – உடல் கண்டுபிடிப்பு

ரவூப், ஜூன்.14 – சுங்கை ஜெராம் பெசு ஆற்றில் 13 வயது சிறுவன்  விழுந்து காணாமல் போன புகாரைத் தொடர்ந்து, தேடும் நடவடிக்கையில் அவனது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று மாலை 5.11 மணியளவில், முகமட் முஸ்சாவார்  ஷாஹ முகமட் ரோஜி என்ற சிறுவனின் உடல் கண்டு பிடிக்கப்பட்டதாக  பகாங் தீயணைப்பு, மீட்புப் படையின் தலைவர் அனுவார் ஹாசான் தெரிவித்தார்.

அச்சிறுவன் விழுந்த இடத்திலிருந்து 1 கிலோ மீட்டர்  தூரத்தில் இருந்த மரத்தின் இடுக்கில் சிக்கிக் கொண்டிருந்தாக அவர் தெரிவித்தார். சிறுவனின் உடல் சவப் பரிசோதனைக்காக ரவூப் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த செவ்வாய் கிழமை, காட்டியில் புகைப்படம் எடுப்பதற்காக தனது இரு நண்பர்களுடன் சென்ற அந்தச் சிறுவன், கால் வழுக்கி ஆற்றில் விழுந்ததாகத் தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker