Latestமலேசியா

எம்ஏசிசி அதிகாரியின் புகார்: விசாரணை செய்வீர்! -கிட் சியாங்

கோலாலம்பூர், ஜூன் 14 – ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஶ்ரீ அபாண்டி அலிக்கு எதிராகச் செய்திருந்த புகாரை லத்தீபா  கோயா விசாரணை செய்ய வேண்டும் என லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான 1எம்டிபி வழக்கில் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லையென அறிவித்தது தவறு என கூறி தாக்கல் செய்யப்பட்ட அந்த மனு கிடப்பில் போடப்பட்டது.

தற்போது நஜிப் பலவேறு ஊழல் வழக்குகளைச் சந்தித்து வருகிறார். தமது வழக்குகளை மூடி மறைக்க முன்னாள் சட்டத்துறைத் தலைவர்  டான்ஶ்ரீ கனி பட்டாயிலை பதவியிலிருந்து அகற்றி  அவருக்குப் பதிலாக அபாண்டி நியமிக்கப்பட்டதானது தமது வழக்குகளை மூடி மறைக்கும் நோக்கம் கொண்டவை என கிட் சியாங் சுட்டிக் காட்டினார்.

எனவே, இவை யாவும் நீதிக்குப் புறம்பான செயல்கள் என்பதால், அபாண்டிக்கு எதிரான புகாரை மீண்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு,  விசாரணை செய்ய வேண்டுமென  கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker