Latestமலேசியா

ஒரின சேர்க்கை காணொளி ; சர்ச்சை ஏற்படுத்திய முகமட் ஹாஸிக் கைது ?   

சிப்பாங், ஜூன்.14- ஒரின சேர்க்கை உறவில் ஈடுபடும் காணொளியில் வரும் நபர்கள் நானும் பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியும்தான் என கூறி காணொளி வெளியிட்ட முகமட் ஹாஸிக் அப்துல் அஸிஸை இன்று மாலை சிப்பாங் விமான நிலையத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மூலத் தொழில்துறை துணை அமைச்சர் சம்சுல் இஸ்கண்டார் முகமட் அக்கினியின் தனிப்பட்ட செயலாளர் பதவியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட அவர் இன்று மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என காவல் துறை தரப்பு தெரிவித்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆயினும் எந்த புகார் குற்றத்தின் அடிப்படையில் முகமட் ஹாஸிக் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது இதுவரை தெரியவில்லை. காவல் துறையிடம் இது குறித்து தகவல் அறிய முயற்று வருவதாக அந்த ஊடகம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker