Latestஉலகம்

கப்பல் வெடிவைப்பு: ஈரானின் சதி வேலை: வீடியோ ஆதாரம் தந்தது அமெரிக்கா!

நியூயார்க், ஜூன். 14- நேற்று முன்தினம் ஓமான் வளைகுடா பகுதியில் இரண்டு எண்ணெய்க் கொள்கலக் கப்பல்களில் நடத்தப்பட்ட கடல் கண்ணிவெடித் தாக்குதல்களில் ஈரான் தான் சம்பந்தப்பட்டு இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை அமெரிக்க ராணுவம் இன்று வெளியிட்டுள்ளது.

கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்து இருக்கும் கப்பலைச் சுற்றி இருந்த இருந்த சில வெடிக்காத கண்ணி வெடிகளை ஈரானிய சிறப்புப் படைப் பிரிவு அகற்றும் காட்சியைக் கொண்ட வீடியோ ஒன்றை அமெரிக்க ராணுவம் வெளியிட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட கப்பலைச் சுற்றி வெடிக்காமல் இருந்த கண்ணிவெடிகளை அகற்றுவதில் ஈரானின் சிறப்பு படை பிரிவினர் ஈடுபட்டிருப்பதை  மற்றொரு ஜப்பானிய எண்ணெய்க் கப்பலிலிருந்து வீடியோ படம் எடுக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.

குறிப்பிட்ட அந்த வீடியோ காட்சி, நார்வேயைச் சேர்ந்த எண்ணெய்க் கொள்கலக் கப்பல் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதை காட்டுவதாக அமைந்துள்ளது. ஓமன் வளைகுடாப் பகுதியில் அண்மைய சில வாரங்களில் கிட்டத்தட்ட 4 எண்ணெய் கப்பல்கள் இத்தகைய வெடிப்புச் சம்பவங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றன.

இதன் பின்னணியில் ஈரான் சம்பந்தப் பட்டிருக்கிறது என்று கூறப்பட்ட போதிலும் முதன்முறையாக அமெரிக்கா அதற்கான வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker