Latestஉலகம்

சிங்கையின் 200 ஆண்டு நினைவு கரன்சியில் கோவிந்தசாமி பிள்ளை உள்பட 8 முன்னோடிகள்!

சிங்கப்பூர், ஜூன் 14- சிங்கப்பூர் தனது 200 ஆண்டுகால நினைவார்த்தைக் கொண்டாடும் வகையில் 20 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள  கரன்ஸி நோட்டை வெளியிட்டிருக்கிறது.  அந்தக் கரன்சி நோட்டில் இடம்பெற்றுள்ள 8 முன்னோர்களில் வள்ளல் பி. கோவிந்தசாமி பிள்ளையும் ஒருவராவார்.

இந்த நினைவார்த்த கரன்சி நோட்டிற்கு சிங்கப்பூர் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டு பற்றாக்குறை நிலவியதால் மேலும் 20 லட்சம்  கரன்சி நோட்டுகளை வெளியிட சிங்கப்பூர் நிதித்துறை வாரியம் முடிவு செய்திருக்கிறது.

இந்தக் கூடுதல்  கரன்சி நோட்டுகள் அக்டோபர் அல்லது நவம்பர் மாத வாக்கில் மக்களுக்கு கிடைக்கும் என்று அது அறிவித்திருக்கிறது. தொடக்கத்தில் 20 மில்லியன் 20 டாலர் நோட்டுகளை சிங்கப்பூர் வெளியிட்டு இருந்தது.

அது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றது. வங்கிகளில் கூட அந்த நோட்டுக்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை. இதன் ஆன் -லைன் சந்தையில் ஒரு இருபது டாலர் சிங்கப்பூர் நோட்டின் விலை 988 சிங்கப்பூர் டாலருக்கு விற்பனை ஆகும் அளவுக்கு அதிக கிராக்கி இருந்தது.

இந்நிலையில் மேலும் 20 மில்லியன் 20 டாலர் நோட்டுகளை வெளியிட முடிவு செய்து இருப்பதாக அந்நாட்டின் நிதித்துறை வாரியம் அறிவித்திருக்கிறது

அதில் நவீன சிங்கப்பூருக்கு அடித்தளமாக விளங்கிய முன்னோர்களின் படங்கள் இந்த நாணயத்தில் இடம் பெற்றிருக்கின்றன.  முன்பகுதியில் சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசோ இஷாக்  படமும்  முன்னாள் சுப்ரீம் நீதிமன்றத்தின் படமும் மற்றும் சிட்டி ஹாலின் படமும் இடம் பெற்றிருக்கின்றன.

அதன் பின் பகுதியில் நாட்டின் முன்னோர்களாக கருதப்பட்ட எண்மரின் படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.  சிங்கப்பூர் ஆற்றின் படமும் இடம் பெற்றிருக்கிறது.

நவீன மலாய் இலக்கியத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் முன்ஷி அப்துல்லா, சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் மற்றும் சிங்கப்பூர் பொட்டானிக்கல் கார்டனின் முதல் இயக்குனர் என்று நிக்கோலஸ் ஹென்றி ஆகியோரின் படங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

இதில் 1900ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் ரப்பர் தோட்டங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தவர் நிக்கோலஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் சிங்கப்பூரில் பல்வகை பள்ளிகள் உருவாக காரணமாக இருந்தடான் கா கீ, சமூக சேவையாளர் திரேசா ஷு சியே, சிங்கப்பூரின் பேட்மிண்டன் மற்றும் டென்னிஸ் வீராங்கனையான திருமதி  அலீஸ் பென்ஃபாதர்,  மலாய் ரெஜிமண்டின்   முதலாவது படைப் பிரிவை சேர்ந்த லெப்டினெண்ட்  அட்னான் சைடி
ஆகியோருடன் இந்திய சமுதாயத்தின் முன்னோடிகளில் ஒருவரும் வள்ளலுமான  பி. கோவிந்த சாமி பிள்ளையின் படமும் இடம்பெற்றுள்ளது.

கோவிந்தசாமி பிள்ளை 1905 -இல் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்தார். பல்வேறு சமூக சேவைக்காக நிறைய பண உதவிகள் செய்ததோடு ஆலயங்கள் உருவாகும் இவர் வழிவகுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker