Latestமலேசியா

பேருந்து விட்டுச் சென்றதால் கதறியழுது ஆர்ப்பாட்டம் செய்த பெண்

பட்டர்வொர்த், ஜூன்.14 – விரைவுப் பேருந்தில் பயணிக்கும்போது, நெடுஞ்சாலை ஓய்விடத்தில்  பேருந்து  சில நிமிடங்கள் நிற்கும். கழிவறைக்குச் செல்ல இறங்கி தாமதமானால்,  பேருந்து நம்மை விட்டுச்  சென்று விடுமோ என்ற பயம் இருப்பதனால்  சிலர் பேருந்தை விட்டு இறங்கவே மாட்டார்கள்.

அண்மையில் சிம்பாங் பூலாய் பெட்ரோல் நிலையத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியும்  நான்கு முதல் ஐந்து வயதுடைய இரண்டு பிள்ளைகளும் பேருந்தை தவறவிட்ட பரிதாப சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

அந்தப் பெண்மணி சம்பந்தப்பட்ட பேருந்தில்   குவாந்தானிலிருந்து  பட்டவொர்த்தை நோக்கிப் பயணித்துள்ளார். அப்போது, கழிவறைக்குச் சென்று திரும்புகையில், பேருந்து அவர்களை விட்டுச் சென்ற அதிர்ச்சியில், அவர் கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

இதைக் கண்ட பெட்ரோல் நிலைய ஊழியர்கள் அவரிடம் பேசியதில், அவரால் வாய் பேச முடியாததை அறிந்துள்ளனர். பேருந்து டிக்கெட்டைக்  காட்டி  அவர் சைகை மொழியில் விளக்கியுள்ளார்.

அதன் பின்னர்,  ஊழியர்கள் அந்த டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ள முடிய வில்லை. விரைவுப் பேருந்து நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, நிலைமையை எடுத்துரைத்துள்ளனர்.

அதே இடத்திற்கு, இன்னொரு பேருந்து செல்வதை அறிந்து,  அம்மூவரையும் அந்தப் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். அந்த இன்னொரு பேருந்து வரும் வரையிலான 1 மணி நேர இடைவேளையிலும்,  அந்தப் பெண் அழுது கத்திக் கொண்டிருந்ததாக ‘பேஸ்புக்கில்’  பதிவேற்றம்  செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையில், இதே போல் பாதிக்கப்பட்ட சிலர் தங்களின் அனுபவங்களைத் வலைத்தளத்தில்  பகிர்ந்துள்ளனர்.  அதில் ஒருவர், இப்படி தான் நான் துரத்தி ஓடி பேருந்தைத் தட்டி தட்டி நிறுத்தினேன் என்றார்.

அதிலும், ஒருவர் பேருந்து ஓட்டுநர்  பொறுப்பின்றி நடந்துக் கொண்டார். பேருந்தில் பயணத்தைத்  தொடங்கும் முன் ஏன் அவர் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கவில்லை என கேட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker