Latestமலேசியா

போலீஸ் பிணையில் லோக்மான் விடுவிப்பு

கோலாலம்பூர், ஜூன்.14 – கடமையில் இருந்த போலீசாருக்குத்  தடங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இன்று காலை அவரிடம் விசாரணை நடத்திய பின்னர்,  காலை 7 மணியளவில் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக சிலாங்கூர் புலனாய்வுத் தலைவர் பாடில் அகமட் தெரிவித்தார்.

நேற்று மாலை 6.45 மணியளவில் காஜாங், தாமான் டெக்னோலோஜி பார்க்கில் லோக்மானும் மஇகா பிரமுகர் ஒருவரும் போலீசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை மறுத்த காரணத்தினால் கைது  செய்யப்பட்டு புக்கிட் அமானுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

அதற்கு முன்னர் லோக்மான் காஜாங் போலீஸ் தலைமையகத்துக்கு வந்து,  பாலியல் வீடியோ சம்பந்தமாகப் புகார் கொடுத்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker