Latestமலேசியா

வாங் கிளியான்: 16 ஆள் கடத்தல் கும்பல்கள்!

புத்ரா ஜெயா, ஜூன் 14 – பெர்லிஸ், வாங் கிளியான் ஆள்கடத்தல் மற்றும் புதைகுழிகள் காணப்பட்டதை அடுத்து நடைபெறும் அரச விசாரணை  நடைபெற்று வருகிறது.

அதில் சாட்சியமளித்த 45 ஆவது சாட்சியான  வாட் 69 கமாண்டோ அணியில் பணியாற்றிய  ஏஎஸ்பி முகமட் யூசோப் அரிஃபின், அங்கு 16 முகாம்கள் இருந்ததாகவும் அவற்றை வெவ்வேறு கடத்தல் குழுக்கள் நிர்வகித்து வந்ததாகத் தெரிவித்தார்.

சில முகாம்களில் உணவுத் தட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. சிலவற்றில் தட்டுகள் கிடைக்கவில்லை. அங்கு காணப்பட்ட பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டதாக இருந்தன. சில முகாம்களில் வேலி அமைக்கபட்டிருந்தன, சிலவற்றில் வேலி இல்லாமல் இருந்தன. அந்த முகாம்களில் கல்லறைகள் எதுவும் காணப்படவில்லை என தெரிவித்தார்.

அந்த 16 முகாம்களிலும் தாய்லாந்து அரிசி, சமைக்கப்பட்ட அரிசிச் சோறு, கரடி பொம்மை மற்றும் துணிகள் காணப்பட்டன,

அந்த முகாம்களில் நுழைய தாய்லாந்தின் அனுமதியைப் பெறவேண்டும். அவை காட்டினுள் 35 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தன. அங்கு செல்ல கரடு முரடானான பாதை இருந்ததால், அங்கு பாதுகாப்புப் படை வீரர்கள் பிரச்ச்சினை இருந்தால் மட்டுமே செல்வர்.

அந்தக் காடுகளுக்குச் செல்ல மிகுந்த சிரமம் என்றும் பள்ளத்தாக்கும் செங்குத்தான சரிவுகள் பல இருப்பதால்,  அங்கு அடிக்கடி சென்று என்ன நடக்கின்றது என்பதை அறிய முடியவில்லை என தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker