Latestமலேசியா

ஸாக்கிருக்கு நீதி கிடைப்பதை இந்திய முஸ்லிம்கள் உறுதி செய்வர்- டத்தோஶ்ரீ சுப்ரா

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 14 – சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நாயக்கிற்கு இந்தியாவில் நியாயமான தீர்ப்பு கிடைக்க அங்குள்ள முஸ்லிம் மக்கள் உறுதி செய்வர் என முன்னாள் அமைச்சரும் மஇகாவின் முன்னாள் தலைவருமான  எஸ்.சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு ஸாக்கிருக்கு நீதி கிடைக்காது என பிரதமர் துன் மகாதீர் கூறியிருப்பது தவறு என குறிப்பிட்ட சுப்ரமணியம்,  உலகின் முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட மூன்றாவது பெரிய  நாடாகவுன் பெரிய ஜனநாயக நாடாகவும்  இந்தியா இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஒரு நாட்டின் நீதி முறைமையில் சந்தேகிக்கும் நாம்,  நம் நாட்டின் மீதும் மற்ற நாட்டினர் சந்தேகம் கொள்வர் என்பதை உணர வேண்டும் என சுட்டிக்காட்டினார். அங்கு ஸாக்கிருக்கு ஏராளமான சிஷ்யர்கள் இருக்கின்றனர். அவர்கள் நீதி கிடைக்கப் போராடுவர் என சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

இந்தியாவில் 11. 5 கோடி ரிங்கிட் பண மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் ஸாக்கிருக்கு அங்கு நீதி கிடைக்காது என்றும் அவரை அந்நாட்டுக்கு அனுப்ப மறுக்கும் உரிமையை மலேசியா கொண்டிருபதாகவும்  மகாதீர் குறிப்பிட்டது  பலரின் கண்டனங்களைச் சம்பாதித்துள்ளது.

இதனிடையே தமக்கு பிஜேபி கட்சியின் நரேந்திர மோடி அரசு தனக்கு நியாயமான நீதியை வழங்காது என ஸாக்கிர் குறிப்பிட்டிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker