Latestமலேசியா

4ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுவன்; உயிருக்கு போராட்டம் !

ஶ்ரீ கெம்பாங்கான், ஜூன்.14- அடுக்குமாடி வீட்டின் பால்கனியிலிருந்து கீழே விழுந்த 9 வயது சிறுவன் படுகாயமுற்று தற்பொழுது செர்டாங் மருத்துவ மனையில் திவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளான்.

இச்சம்பவம் தொடர்பில் இன்று காலை மருத்துவமனை தரப்பு காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கியது என செர்டாங் மாவட்ட ஒசிபிடி துணை ஆணையர் இஸ்மாடி பொர்ஹான் தெரிவித்தார்.

பண்டார் பாரு பெர்மாய் எனுமிடத்தில் உள்ள அடுக்குமாடி வீட்டிலிருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்ததாக மருத்துவமனைக்கு அழைப்பு வந்ததை அடுத்து அவசர சிகிச்சை பிரிவினர் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு அச்சிறுவன் படுகாயமுற்று சுய நினைவிழந்து கிடந்துள்ளான்.

அச்சிறுவன் நான்காவது மாடியில் உள்ள வீட்டு பால்கனியில் விளையாடி கொண்டிருக்கும் பொழுது தவறி கீழே விழுந்துள்ளான் என விசாரனையில் தெரிய வந்துள்ளது.

அச்சிறுவனுக்கு தலைப்பகுதியில் படுகாயம் – கை, கால் பகுதிகளும் முறிவு ஏற்பட்டுள்ளது. வயிறு , நுரையீரல் பகுதிகளிலும் ரத்தக் கசிவு உள்ளது. இதன் தொடர்பில் அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என அவர் விவரித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது குறித்து தகவல் அறிந்தவர்கள் 03-2052 9999 என்ற எண்களை அழைப்பது மட்டுமின்றி அருகிலுள்ள உள்ள காவல் நிலையங்களையும் தொடர்பு கொள்ளலாம் என இஸ்மாடி பொர்ஹான் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker