Latestஉலகம்

MH17 வீழ்த்தப்பட்ட விவகாரம்: அடுத்த வாரம் புதிய ஆதாரங்கள்!

ஆம்ஸ்டர்டாம், ஜூன்.  14- கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மலேசிய பயணிகள் விமானமான MH17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தங்களின் புதிய ஆதாரங்களை அடுத்த வாரம் வெளியிட இருப்பதாக அனைத்துலக விசாரணை குழு அறிவித்திருக்கிறது.

இந்தப் பேரிடர் நடந்து ஐந்து ஆண்டுகள் முடியும் நிலையில் தாங்கள் கண்டறிந்த புதிய ஆதாரங்கள் குறித்து  விமான விபத்தில் கொல்லப்பட்ட பயணிகளின் குடும்பத்தினர் மற்றும் செய்தியாளர்களுக்கு ஜூன் மாதம் 19ஆம் தேதி விளக்கம் அளிக்கவிருப்பதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் ஆதரவு கிளர்ச்சிப்  படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதியில் இருந்து MH17 விமானம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்ட இருப்பதாக நம்பப்படுகிறது.

நெதர்லாந்திலிருந்து ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது வீழ்த்தப்பட்ட இந்த விமானத்தில் பயணித்த 298 பேரும் கொல்லப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலோர்  நெதர்லாந்து பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணைத் தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ள சில தனிநபர்களை அடையாளம் காட்டுவதில் விஷயம் விசாரணையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே  தங்களின் அடுத்த கட்ட பணி என அனைத்துலக விசாரணையாளர்கள் தெரிவித்தனர். இந்த அனைத்துலக விசாரணை குழுவில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, யுக்ரேன் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker