Latestஇந்தியா

மருத்துவர்கள் மீது தாக்குதலா? நாடு தழுவிய அளவில் போராட்டம்!

கொல்கத்தா, ஜூன் 5- மேற்கு வங்க வன்முறையை கண்டித்து ஜூன் 17ஆம் தேதி வரை மருத்துவர்கள் நாடு தழுவிய நிலையில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர் .

இப்போராட்டம் ஜூன் 17ஆம் தேதி அரசு மற்றும் தனியார் அனைத்து மருத்துவர்களும் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

கொல்கத்தாவில் இரு அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து வரும் 17ஆம் தேதி அரசு -தனியார் என அனைத்து மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் -உலக மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அத்தியாவசிய சேவைப் பணியில் இல்லாத மருத்துவர்கள் நாள் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் .

இன்று 15 மற்றும் நாளை16 தேதிகளில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றவும் அமைப்பு பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் .போராட்டம் நடைபெறும் தேதிகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சேவை இயங்கும். திங்கட்கிழமை நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது .

மேற்கு வங்கத்தில் இரு மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் திங்கட்கிழமை வரை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

கல்கத்தா உயர் நீதிமன்றம் மருத்துவர்கள் போராட்டத்திற்கு மேற்கு வங்க அரசு தீர்வு காண வேண்டும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் என்னென்ன இது குறித்து 7 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் மருத்துவமனைகளில் வன்முறை தொடர்பாக மருத்துவர் சங்கம் கூறும்போது மருத்துவமனை வன்முறையில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

வழக்குகள் பதிவு செய்யப்படும் குற்றவாளிகளை கைது செய்யப்படுவதை உறுதி செய்ய சட்டம் நடைமுறை படுத்தவேண்டும் .மருத்துவமனைகள் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு முறையாக பாதுகாப்பு வழங்குவது மாநில அரசின் கடமையாகும் என்று தலைமைச் செயலாளர் அசோகன் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker