Latestமலேசியா

கலவை சிமெண்ட் விலை உயர்வு: பக்காத்தான் அரசே பொறுப்பு! – மசீச

கோலாலம்பூர், ஜூன். 16- தயார் செய்து விற்கப்படும் சிமெண்ட் கலவையின் விலை கிடுகிடுவென உயர்வு காண்பதைத் தடுக்க முடியாமல் போகுமேயானால் அதற்கான பொறுப்பை பக்காத்தான் அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று மசீசவின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார்.

தயார் செய்யப்பட்ட இத்தகைய சிமெண்ட் கலவைகள், இப்போது 40 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை விலை உயர்வைக் காணுகிறது. இதனால் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.

ஏற்கனவே தங்களின் குத்தகைகளில் கையெழுத்திட்டு இருக்கின்ற அரசு மற்றும் தனியார் குத்தகையாளர்கள், தற்போது இத்தகைய சிமெண்ட் விலை உயர்வினால் மிகப்பெரிய இழப்பை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அதோடு அவர்கள் திவாலாக கூடிய வாய்ப்பும் அதிகமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கலவை செய்த சிமெண்ட் விலை அதிகரிப்பினால் மக்களின் வாழ்க்கைச் செலவினம் அதிகரிக்கும். தற்போது அரசாங்கம், மக்களின் வாங்கும் சக்திக்கு உகந்த வீடுகளை கட்டுவதில் ஈடுபட்டிருக்கிறது. இத்தகைய சிமெண்ட் விலை உயர்வினால் அந்த வீடுகளின் விலையும் உயரும் என்று அவர் சொன்னார்.

ஏற்கனவே பக்காத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 100 பில்லியன் ரிங்கிட் வரை தேசிய கடன் அதிகரித்திருக்கின்ற நிலையில் அரசாங்கத்தின் இந்த வீடமைப்புத் திட்டம் பாதிக்கப் படுமானால் இன்னும் கூடுதலான கடன்களை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker