Latestமலேசியா

சிறுவன் – சிறுமி கொடுமை: தம்பதியுடன் 13 வயது மகளும் கைது!

செர்டாங், ஜூன். 16- தங்களுடன் வாழ்ந்துவரும் 8 வயது சிறுவன் மற்றும் 7வயது சிறுமி ஆகிய இருவரையும் கொடுமைப் படுத்தி துன்புறுத்தியதாக ஒரு தம்பதியர் மற்றும் அவர்களின் 13 வயது மகள் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று பிற்பகலில் பூச்சோங்கிலுள்ள ஒரு வீட்டில் போலீசார் திடீர்ச் சோதனை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளையும் விட்டனர் என செர்ங் மாவட்ட ஓசிபிடி
இஸ்மாடி பொர்ஹான் தெரிவித்தார்.

தங்களுக்கு பொதுமக்களிடம் இருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அந்த வீட்டை சோதனையிட்டதாகவும் 33 வயதுடைய ஓர் ஆடவர் மற்றும் 30 வயதுடைய அவரது மனைவி மற்றும் 13 வயதுடைய அவர்களது மகள் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர் அவர் சொன்னார்.

அந்த வீட்டில் வாழ்ந்து வந்த சிறுவனும் அந்த சிறுமியும் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டனர். மேலும் அவர்களின் உடலில் துன்புறுத்தலுக்கு உள்லான அடையாளங்கள் இருந்ததாக அவர் கூறினார்.

அந்த சிறுவன் மற்றும் சிறுமியின் பெற்றோர்கள் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்து கொண்ட பின்னர் அவர்கள் இருவரும் இந்த வீட்டில் தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

அவர்களைக் கொடுமைப் படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பிரம்பு, ரப்பர் குழாய் மற்றும் முள்கரண்டி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். உடல் மெலிந்து காணப்பட்டதால் அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker