Latestவிளையாட்டு

ஜப்பானின் அகியாமாவை வீழ்த்தினார் மலேசிய வீரர் அகிலன் தாணி! – வாழ்த்து குவிகிறது!

கோலாலம்பூர், ஜூன்16-

ஜப்பானின் ஜாம்பவானான அகியாமாவை வீழ்த்திய மலேசியாவின் அகிலன் தாணிக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்து மழை பொழிகின்றது.

கலப்பு தற்காப்புக் கலை வீரர்களுக்கான ‘ஒன் சாம்பியன்ஷிப்” போட்டி நேற்று சனிக்கிழமை சீனாவில் (ஷங்காய்) நடைபெற்றது. இப்போட்டியில்  அகிலன் தாணியும் ஜப்பானின் அகியாமாவும் மோதினர்.

இப்போட்டியில் 43 வயதான அகியாமாவை 23 வயது நிரம்பிய அகிலன் தாணியை எதிர்கொண்டது மக்களின் கவனத்தை பெருமளவு ஈர்த்தது. அகியாமா இந்த தற்காப்பு கலையில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போட்டியில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்திய அகிலன் தாணி, பெரும் போராட்டத்திற்கு (மூன்றாவது சுற்றில்) அவரை  வீழ்த்தினார். அகிலன் தாணியின்  இந்த வெற்றி பெரும் சாதனையாக கருதப்படுகின்றது.

மக்கள் குறிப்பாக மலேசியர்கள் அவரை பாராட்டி சமூக வலைத் தளங்களில் பாராட்டுக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker