Latestஇந்தியா

திருமணம் செய்து கொள்ளச் சொல்லி 15 வயது மகளை கத்தியால் குத்திய தந்தை!

கான்பூர்,ஜூன்.16- உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் திருமணம் செய்து கொள்ள மறுத்த 15 வயது சிறுமியை பெற்ற தந்தையை கத்தியால் குத்திய கொடூர சம்பவம் நடந்துள்ளது.

“என்னுடைய தந்தை என்னை ஆள் நடமாட்டமில்லாத கால்வாய் பகுதிக்கு அழைத்துச் சென்றார். என்னுடைய சகோதரனும் உடன் வந்தார். அவ்விடத்தில் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்குமாறு வலியுறுத்தினார் என் தந்தை.

நான் மேற்கொண்டு படிக்க விரும்புவதாக தெரிவித்தேன்.கோபமடைந்த தந்தை என்னை அடிக்கத் தொடங்கினார். அப்போது என்னுடைய சகோதரன் என்னைப் பிடித்துக் கொண்டான். என்னுடைய தந்தை என்னை அடித்ததோடு நின்று விடாமல் கத்தியால் குத்தினார். என்னை விட்டு விடுமாறு கெஞ்சினேன்.

என்னை கால்வாய்க்குள் தள்ளிவிட்டார். எப்படியோ நீந்தி உயிர் பிழைத்து விட்டேன் என கூறியுள்ளார் அந்த சிறுமி. இது தொடர்பாக போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் பெற்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

சிறுமியின் உறவினர் பேசுகையில், திருமணத்திற்கு வற்புறுத்தியதால் இத்தனை இன்னலும் நடந்தேறியது. தற்போது எங்களுடைய வீட்டில் தான் சிறுமி தங்கி இருக்கிறார் என கூறியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker