Latestமலேசியா

பக்காத்தானுக்கு இளைஞர்கள் வாக்களித்தது ஏன்?- ஹாடி அவாங்கிற்கு சாடிக் பதிலடி!

மூவார், ஜூன் 16 – 14ஆவது பொதுத்தேர்தலில் பாக்காத்தானும் 30 விழுக்காட்டு இளைஞர்கள் வாக்களித்துள்ளாதாகக் குறிப்பிட்ட பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங்கை,  இளைஞர் விளையாட்டு அமைச்சர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் சாடியுள்ளார்.

பக்காத்தானுக்கு வாக்களித்த இளைஞர்கள் அல்-குரானை படிக்கவில்லை என்றும் அதனைப் புரியாமல் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என ஹாடி குறிப்பிட்டதைச் சாடிய சைட் சாடிக், இளைஞர்கள் மாற்றதை விரும்பியும் இன, சமய அரசியலை ஒதுக்கியும் பக்காத்தானுக்கு வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மாற்றத்தை ஏற்படுத்த பக்காத்தானால்தான் முடியும் என அவர்கள் நம்பினர். மேலும், பாஸும் அம்னோவும் நடத்திவரும் இன, சமய அரசியலை அவர்கள் வெறுத்தனர். அம்னோவின் ஊழல் ஆட்சியை மாற்ற வேண்டுமென்ற கட்டாயத்தினால்தான் அவர்கள் பக்காத்தானுக்கு ஆதரவாக இருந்தனர்.

நஜிப் மற்றும் அவரின் துணைவியாரின் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதை ஹாடி விரும்பாமல் ஜசெக கட்சியை சகட்டுமேனிக்குத் திட்டுவதையும் நஜிப்பின் ஊழல்களைக் கண்டு கொள்ளாத தன்மையையும் இளைஞர்கள் வெறுத்த காரணத்தினால்தான் அவர்கள் அம்னோவையும் பாஸ் கட்சியையும் பொதுத்தேர்தலில்  வெறுத்து ஒதுக்கியதாக சைட் சாடிக் சுட்டிக்காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker